கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் மதவாச்சி பிரதான வீதியில், ஆண்டியா புளியங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை (22) அதிகாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


