இறக்குமதி அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி வெளியீடு

31 0

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை அறிவிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை இதனை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ஒரு கிலோகிராம் 210 ரூபாய், நாடு அரிசி ஒரு கிலோகிராம் 220 ரூபாய், சம்பா ஒரு கிலோகிராம் 230 ரூபாய், பொன்னி சம்பா ஒரு கிலோகிராம் 240 ரூபாய் மற்றும் கீரி பொன்னி அல்லது பால் பொன்னி ஒரு கிலோகிராம் 255 ரூபாய் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.