சாவித்திரி போல்ராஜ் – பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய செயலாளர் இடையில் சந்திப்பு!

46 0

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய செயலாளர் W.M.D.T. விக்ரமசிங்க இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.

W.M.D.T. விக்ரமசிங்க , பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய செயலாளராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் சாவித்திரி போல்ராஜூடன் இடம்பெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்த சந்திப்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் டாக்டர் நாமல் சுதர்ஷனவும் கலந்துகொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களின் முன்னேற்றத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையுடன் அமைச்சின் எதிர்கால திட்டங்கள் மற்றும் மூலோபாய திசைகள் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.