பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக என்பவரின் பாதுகாப்புக்காக சுமார் 87 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக “ஹரக் கட்டா”வின் சட்டத்தரணி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு குறிப்பிட்டுள்ளார்.
“ஹரக் கட்டா”வின் சட்டத்தரணி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“ஹரக் கட்டா” 2 ஆண்டுகளுக்கும் அதிக காலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அதிக காலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர் “ஹரக் கட்டா” தான்.
“ஹரக் கட்டா”வின் பாதுகாப்புக்காக சுமார் 87 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

