இன்று மாலை மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள முத்து மாரி அம்மன் ஆலயத்தின் மண்டபம் உடைந்து விழுந்து 18 பேர் வரையில் படுகாயம் அடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது. இந்த கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அதற்கான பிளேட் கொங்கிறீட் இடும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போதே இவ் அனர்த்தம் இடப்பெற்றுள்ளது.
அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே படுகாயமடைந்திருப்பதாக தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


அச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரையம்பதி பொலிஸார் மேட்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பிரதேசம் மிகவும் சோகமயமாக காட்சியளிக்கிறது.
மேலும் செய்திகளை அறிந்துகொள்ள எம்முடன் இணைந்திருங்கள்.



