நவம்பர் 1 முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் பைகள், கொள்கலன்களுக்கும் பணம் செலுத்தவேண்டும்!

67 0

பொருட்களை கொள்வனவு செய்யும் நாட்டின் அனைத்து வாடிக்கையாளர்களும் நவம்பர் 1ஆம் திகதி முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கொள்கலன்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய விதிமுறையின் கீழ், “சிலி பைகள்” என்று அழைக்கப்படும் சிறிய பொலித்தீன் பைகள் இனி இலவசமாக வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சில்லறை விற்பனையாளர்கள், பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களிடம் கொடுக்கும் ஒவ்வொரு பை மற்றும் கொள்கலனுக்கும் கட்டணம் வசூலிக்கவேண்டும் என்றும் அதிகாரசபையினர் அறிவித்துள்ளனர்.

மேலதிக செலவுகளைத் தவிர்க்கவும், பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய முயற்சிகளுக்கு பங்களிக்கவும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகள் மற்றும் கொள்கலன்களை பயன்படுத்துமாறு அதிகாரிகள் நுகர்வோரை வலியுறுத்துகின்றனர்.

இந்த முயற்சி சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்புள்ள நுகர்வோர் பழக்கவழக்கங்களை நோக்கிய பரந்த உந்துதலை பிரதிபலிப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.