மருதானையில் 2,562 பொதிகளுடன் ஒருவர் கைது!

39 0

கொழும்பில் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் மருதானை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (17) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருதானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கிருலப்பனை பகுதியில் வசிக்கும் 47 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து அழகுசாதனப் பொருட்கள் மற்றும் 950 கிலோ மஞ்சள் அடங்கிய 2,562 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.