மஹிந்த,மைத்திரி பாதுகாப்பு வாகனங்களை கோரியுள்ளார்கள்

58 0

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன குண்டுத் துளைக்காத வாகனத்தை கோரியுள்ளார்கள். பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வாகனங்களை மீண்டும் வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (11) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை (நீக்குதல்) சட்டத்துக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் மாத்திரமே இரத்து செய்யப்பட்டுள்ளன.பாதுகாப்பு ஏதும் முழுமையாக குறைக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன குண்டுத் துளைக்காத வாகனத்தை கோரியுள்ளார்கள். பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வாகனங்களை மீண்டும் வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எவரது பாதுகாப்பையும் நாங்கள் அலட்சியம் செய்யவில்லை என்றார்.