இலங்கை கடற்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி பயிற்சித் திட்டத்தினை நடத்தியுள்ளது.
ஒக்டோபர் 03 ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை மையமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக இலங்கை கடற்படை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்படை கட்டளை வைத்தியசாலையால் கடற்படையின் சமூக நோக்கத் திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கடலில் அவசரநிலை ஏற்பட்டால் அடிப்படை முதலுதவி வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் அத்தகைய அவசரநிலையை எவ்வாறு வெற்றிகரமாக நிர்வகிப்பது, தொற்றா நோய்களைத் தடுப்பது, போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது, மன நலம் மற்றும் நல்ல சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து மீனவ சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.





