வட மாகாண ஆளுநர் கழிவு மின் உற்பத்தி திட்டம் குறித்து அறிவுறுத்தல்

48 0

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்  கழிவகற்றல் பெரும் சவாலாக உருவாகியிருப்பதால் கொழும்பு மாநகர சபையால் கழிவுபொருட்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் மின் உற்பத்தி நிலையங்களை பார்வையிட்டு அத்தகைய திட்டங்களின் சாத்தியபாடுகளை ஆராயுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (10) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில்  கழிவகற்றல் தொடர்பான விவகாரம் மிகப் பெரும் சவாலாக உருவாகிவரும் நிலையில் கொழும்பு மாநகர சபையால் கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் மின்உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றைப் பார்வையிட்டு அத்தகையை திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராயுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் போடுவதைக் கண்காணிக்கும் வகையில் சிசிரிவி கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.