இராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு விளக்கமறியல்

54 0

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்ட 30 இராமேஸ்வரம்  மீனவர்களை  எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் இராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த  நிலையில்  கடற்படையினரால் நேற்று முன்தினம் இரவு    கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த  மீனவர்கள் மீது  எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு  மன்னார் நீதிமன்றில்   முற்படுத்தப்பட்டனர் .

வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.