ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மகேஷின் மைத்துனன் கைது

43 0

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறப்படும் ‘மகேஷ் பண்டார’வின் மைத்துனர், துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வாவின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின் பேரில், பணிப்பாளர் (புலனாய்வு/விசேட நடவடிக்கைகள்) பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.யு. கொடிதுவக்குவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் முன்னேடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

பன்னல பொலிஸ் பிரிவின் மாகந்துர, கோனவில பகுதியில் நேற்று (09) இந்த சோதனை இடம்பெற்றது.

இதன்போது மாகந்துர, கோனவில பகுதியைச் சேர்ந்த 46 வயதான சந்தேகநபர் பின்வரும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக பன்னல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.