தொடர்ந்து மூன்றாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

295 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும்17.05.17அன்று டென்மார்க் தலைநகர மாநகர நீதிமன்ற முன்றலில் உணர்வுபூர்வமாக இனஅழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் குழந்தைகள், பெண்கள்,வயோதிபர்கள் என எந்தவித வேறுபாடும் இன்றி தமிழன் என்ற காரணத்தினால் இரத்த வெறி பிடித்த அரச பயங்கரவாதம் எம் உறவுகளை கொத்துக்கொத்தாய் கொன்று குவித்தது. அந்தக்காட்சிகளையே இன்று கண்காட்சிகளாக வைத்து, பல்லின மக்களுக்கு காட்டி, சர்வதேசத்திடம் எமது மக்களுக்கு நீதி வேண்டி நிற்கிறோம்.
கண்காட்சி நடைபெறும் இடத்தில் வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரமும்வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடல்களிலும் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டனர்.

நாளைய தினம் 18.05.17 அன்று தமிழின அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் பேரணி டென்மார்க் பாராளமன்ற முன்றலில் மு.ப 12 மணிக்கு ஆரம்பித்து தலைநகர நகரசபை முன்றலில் நிறைவடையும் . நகரசபை முன்றலில் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்கான வணக்க நிகழ்வும் நடைபெறும்.

எம் இதயச்சுவர்களில் வலிகளால் பதியப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து உறங்கிக்கிடக்கும் மனச்சாட்சிகளை மீண்டுமொரு முறை தட்டிஎழுப்புவோம். எம்உறவுகளுக்காய் நீதி கேட்போம். உறவுகளை இழந்தவரின் உரிமைக்காய் அனைவரும் ஒன்றினைந்து குரல் கொடுப்போம் . வாருங்கள் எம் தாயக உறவுகளே!