அரசாங்க எச்சரிக்கையை மீறி…. பிரான்சின் நகர மன்றங்களில் பறந்த பாலஸ்தீனக் கொடி

62 0

பிரான்சில் கிட்டத்தட்ட இரண்டு டசின் நகர மன்றங்கள் திங்கட்கிழமை தங்கள் நுழைவாயில்களில் பாலஸ்தீனக் கொடியை பறக்கவிட்டன.

ஜனாதிபதி இமானுவல் மேன்ரான் பாலஸ்தீன அரசாங்கத்தை முறையாக அங்கீகரிப்பதற்கு முன்னதாக அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உள்விவகார அமைச்சகம் எச்சரித்திருந்தது.

அரசாங்க எச்சரிக்கையை மீறி.... பிரான்சின் நகர மன்றங்களில் பறந்த பாலஸ்தீனக் கொடி | Town Halls Fly Palestinian Flags

 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது நியூயார்க்கில் முறையாக பாலஸ்தீன அரசை ஜனாதிபதி மேக்ரான் அங்கீகரிக்க உள்ளார்.இந்த நிலையில், தீவிர வலதுசாரி உள்விவகார அமைச்சர் Bruno Retailleau கடந்த வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பாலஸ்தீனக் கொடி பறக்கவிடுவதை எதிர்த்திருந்தார். மேலும், பொது சேவையில் நடுநிலைமை கொள்கை இதுபோன்ற செயல்களைத் தடை செய்கிறது என்றும் விளக்கமளித்திருந்தார்.

அத்துடன், பாலஸ்தீனக் கொடியை பறக்கவிடுவது குறித்து மேயர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவும் நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

 

 

 

அரசாங்க எச்சரிக்கையை மீறி.... பிரான்சின் நகர மன்றங்களில் பறந்த பாலஸ்தீனக் கொடி | Town Halls Fly Palestinian Flags

ஆனால், ஜனாதிபதி மேக்ரான் அறிவிக்கும் முன்னரே, நாடு முழுவதும் 21 நகர மன்றங்களில் பாலஸ்தீனக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் Jean-Noel Barrot தெரிவிக்கையில், அமைதிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றார்.