குஜராத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ விபத்து

69 0

குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் சுபாஷ்நகர் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் ஜாம்நகரைச் சேர்ந்த HRM & Sons நிறுவனத்திற்குச் சொந்தமானது. இது சோமாலியாவின் போசாசோ நகருக்குச் செல்லவிருந்த நிலையிலேயே தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.

அரிசி மூடைகளை ஏற்றியிருந்த கப்பலில் தீ தீவிரமடைந்ததால், அது கடலின் நடுப்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இந்த நடவடிக்கை, துறைமுகத்தில் உள்ள ஏனைய கப்பல்களுக்கு தீ பரவாமல் தடுக்க உதவியது.

தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடடைபெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.