தங்காலை சீனிமோதர பகுதியில் 200 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (22) காலை அந்தப் பகுதியில் மீண்டும் புனரமைக்கப்பட்டு வந்த ஒரு பழைய வீட்டில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த வீட்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறியிலேயே இந்த போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
நடத்தப்பட்ட விசாரணையின் போது, அந்த வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பக்கெட்டுகள் மீட்கப்பட்டதாக முன்னதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இன்று மதியம் தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோகிராம் அளவிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
லொறி ஒன்றில் இருந்து இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் குறிப்பிட்டார்.
அத்துடன் அந்த லொறியில் இருந்து 4 நவீன துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

