சுதந்திரத்துக்கு பின்னர் இரு பிரதான முகாம்களே நாட்டில் ஆட்சியமைத்துள்ளன. அவையிரண்டும் அதிகாரத்துக்காக முரண்பட்டுக் கொண்டன. இது நாம் இழைத்த பெருந்தவறாகும். 77 ஆண்டுகளாக நாட்டுக்கு எந்த சேவையும் செய்யாத ஒரு குழு இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைக் கைற்றியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரிவசம் தெரிவித்தார்.
20ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐ.தே.க.விலிருந்து முற்றிலும் வேறுபட்ட கொள்கையைப் பின்பற்றும் கட்சியின் செயலாளராக இந்த சம்மேளனத்தில் பங்கேற்றுள்ளேன். சுதந்திரத்துக்கு பின்னர் ஐ.தே.க. அல்லது சுதந்திர கட்சியே நாட்டை ஆட்சி செய்துள்ளது. இந்த இரு முகாம்களும் நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனாலும் அதிகாரத்துக்காக முரண்பட்டு எமது இரு தரப்புக்களும் பாரிய தவறிழைத்திருக்கின்றன.
ஒருவரையொருவர் குற்றஞ்சுமத்தி இரு தரப்புக்களுமே இந்த தவறுகளை இழைத்துள்ளன. இதனைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டுக்கு கடந்த 77 ஆண்டுகளாக எந்த சேவையும் செய்யாத குழு இன்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இறுதியில் இந்த இரு தரப்புக்களும் கள்வர்கள் என்றும், வன்முறையாளர்கள் நாட்டை நேசி;த்தவர்கள் என்றும் மக்கள் நம்பினர்.
நாடு மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட மாட்டாது என கட்சி செயலாளர்கள் பயமின்றி கூறும் சூழலே காணப்படுகிறது. இவ்வாறான ஜனநாயக விரோத சூழல் உருவாகுவதை தடுக்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாத்த தலைவர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ அதற்கான முழு

