தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என வலியுறுத்திப் பேசினார்.
கடலில் மீன்பிடிக்கும் போது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழக மீனவர்களுக்காகக் குரல் கொடுப்பது அவசியம் என்று குறிப்பிட்ட விஜய், “மீனவர்களின் உயிர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்” என்றார்.
இலங்கை உட்பட உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஈழத்தமிழர்கள் “தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும்” நிலையில், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும், துணை நிற்பதும் நமது கடமை அல்லவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த உரை, தமிழக அரசியல் மற்றும் சமூக அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

