பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 3 மாடி அறுவை சிகிச்சை வளாகம் திறப்பு

39 0

சீன அரசாங்கத்தின் உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டப்பட்ட மூன்று மாடி அறுவை சிகிச்சை மற்றும் வைத்திய வளாகக் கட்டிடத்தை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்நளிந்த ஜயதிஸ்ஸ சனிக்கிழமை (19) திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண மக்களுக்கு உகந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் பல சுகாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

பொத்துவில் வைத்தியசாலைகளில் ஆதார மூன்று மாடி அறுவை சிகிச்சை மற்றும் வைத்திய வளாகக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிறகு, அமைச்சர் அங்கு நிறுவப்பட்ட சிகிச்சை தொகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அமைச்சர்,

சீன அரசாங்கத்தின் உதவியுடன் 13 வைத்தியசாலைகளை மேம்படுத்தும் திட்டத்தில் 12 வைத்தியசாலைகளின் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் மட்டுமே முடிக்கப்படவில்லை.

தற்போதைய சமூக-பொருளாதார நிலைமை மற்றும் சுற்றுலாதுறைக்கு ஏற்ப பொத்துவில் ஆதார வைத்தியசாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர் வைத்திய சேவைகள் மற்றும் சுற்றுலா சிகிச்சை சேவைத் துறைகளுக்கும் கவனம் செலுத்தப்படும்.

கடந்த காலங்களில் ஆரம்பிக்கபட்ட வைத்தியசாலை தொடர்பான திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காததால் அவற்றை முடிக்க அதிக அளவு பணம் செலவிட வேண்டியுள்ளது. நிறைவுசெய்யப்படாத மேலும் 12 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த திட்டங்களை முடிக்க நிதி ஒதுக்கப்படும்.

பொத்துவில் ஆதார மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மூன்று மாடி அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ வளாகக் கட்டிடத்தின் கட்டுமானச் செலவு ஒரு பில்லியன் ரூபாவாகும், மேலும் உபகரணங்களுக்காக சுமார் 50 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாடி அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ வளாகக் கட்டிடம் வெளிநோயாளர் பிரிவு,  மருந்தகம் , அறுவை சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவுகள் பிசியோதெரபி பிரிவு, இரத்த வங்கி மற்றும் 90 படுக்கைகள் மற்றும் பல சேவைகளைக் கொண்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது, மேலும் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களுக்கு நினைவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

பேருவளை தர்கா வைத்தியசாலை, அளுத்கம வைத்தியசாலை, சம்மாந்துறை வைத்தியசாலை, ஏறாவூர், பொத்துவில், கராப்பிட்டிய, பொலன்னறுவை, பதவிய, வலஸ்முல்லை, கலவான, மஹியங்கனை, ரிக்கிலகஸ்கட ஆகிய வைத்தியசாலைகளை சீன அரசாங்கத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டது.

கிராம அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் எல்.ஜி.வசந்த பியதிஸ்ஸ, தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் எம்.பி. ஏ.ஆதம்பாவ, திகாமடுல்ல மாவட்ட எம்.பி. அப்துல் வசீன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பி.எஸ்.எமி விமலரத்ன, பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி நித்மி ஆர். இந்நிகழ்வில் விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.