ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு எரிபொருள், எரிவாயு, உரம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார்!

44 0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு எரிபொருள், எரிவாயு, உரம், டொலர் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் “உங்கள் கருத்தைக் கைவிடாதீர்கள் – அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளின் நிகழ்வு ஒன்று இன்று சனிக்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சாமர சம்பத் தசநாயக்க இதனை தெரிவித்தார்.

சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவிக்கையில்,

சபாநாயகர் கேட்கின்றார் 79 ஆண்டுகளாக ரணில் நாட்டுக்காக என்ன செய்தார் என்று. பிமல் ரத்நாயக்க ஒரு தொலைக்காட்சி சந்திப்பில் கேட்கிறார் ரணில் நாட்டுக்காக என்ன செய்தார் என்று.

ரணில் நாட்டுக்காக எல்லாவற்றையும் செய்தார்.

அவர் செய்யாமல் இருந்தது பாராளுமன்றத்தை தீ வைத்து எரிக்க வந்தவர்களை கைது செய்து சிறையில் வைக்காததுமட்டும் தான்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு எரிபொருள், எரிவாயு, உரம், டொலர் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார்.

நாட்டு மக்கள் சோர்ந்துபோன நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க தான் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பினார் என சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.