2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 51 இலட்சத்துக்கு மேற்பட்டோர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் 104,602 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 955 கிலோ ஹெரோயின், 1422 கிலோ ஐஸ் , 471 கிலோ ஹசீஸ், 13,773 கிலோ கஞ்சா , 3.5 மில்லியன் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

