விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகம்!

40 0

சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கவனம் செலுத்த வேண்டிய விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.

இவ்வாறான சம்பவம் ஒன்று அநுராதபுரம் பகுதியில் இருந்தும் பதிவாகியுள்ளது.

அநுராதபுரம் பகுதியில் உள்ள விசேட தேவையுடைய  சிறுவர்களுக்கான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவ,மாணவிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் நேற்று(19) கவனம் செலுத்தப்பட்டது.

அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்விசேட தேவையுடைய  69 மாணவ,மாணவிகள் கல்வி கற்கின்றனர்.

குறித்த பாடசாலை, ஒரு தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்படுகிறது.

மேலும் அதன்நிர்வாகம் ஒரு பணிப்பாளர் குழு மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இது வடமத்திய மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் மேற்பார்வையிடப்படுகிறது.

குறித்த பாடசாலையில், விசேட தேவையுடைய மாணவ,மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

மூன்று மாணவ,மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் பாடசாலையின் பொருளாளராகப் பணியாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் தெரிவித்துள்ளது.

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு துன்புறுத்தல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர்கள் அண்மையில் பாடசாலையின் நிர்வாகக் குழுவை கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.