ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் “உங்கள் கருத்தைக் கைவிடாதீர்கள் – அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளின் நிகழ்வு ஒன்று இன்று சனிக்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முதலில் ஆரம்பித்தது நாங்கள் தான்.
ஆனால் போலி குற்றச்சாட்டுக்களின் கீழ் மோசடியான முறையில் அரசியல் தவைவர்களை கைதுசெய்ய நாங்கள் விடமாட்டோம். அதற்கு எதிராக நாங்கள் போராடுவோம்.
நாங்கள் பயமில்லை. நாங்கள் பயந்து ஒதுங்குவோம் என்று நினைத்தார்கள்.
மோசடியான முறையில் அரசியல் தவைவர்களை கைதுசெய்ய முயன்றால் நாங்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.
எந்தவொரு சவால்களுக்கும் முகம் கொடுக்க நாங்கள் தயார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

