சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்!

33 0

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அதுல குமார ரஹுபத்தவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.

அதுல குமார ரஹுபத்த எம்பிலிப்பிட்டிய நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான 7 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் அதுல குமார ரஹுபத்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.