ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா செப்டம்பர் 20ஆம் திகதி

52 0

ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 6ஆம் திகதி இடம்பெற  இருந்த நிலையில்  அது ஒத்திவைக்கப்பட்டு, தற்போது எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு  ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான  ரணில் விக்ரமசிங்க தலைமையில் 11ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா ஏற்கனவே 6ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில்,  கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கட்சியின் முகாமைத்துவ குழு, விழாவை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்திருந்தது.

அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை  எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.