எல்ல – வெல்லவாய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (05 )இடம்பெற்ற பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதற்காக பிரிட்டிஷ் நாட்டவரான எமி விக்டோரியா கிப் என்பவர் பாராளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டார்.
அவ்விபத்து நிகழ்ந்த இடத்தில் அவர் தன்னார்வத்துடன் முன்வந்து, அவசர சேவைகள் வரும் வரை காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியும் ஆறுதலும் வழங்கியதற்காக இவர் கௌரவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை ((09) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து இவர் கெளரவிக்கப்பட்டதுடன், இலங்கை மக்களின் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் சுற்றுலா பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

