கல்வித்துறையில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (08) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதன்போது “பல ஆண்டுகளாக கல்வித்துறையில் சேவையாற்றியும், எங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை”, “எங்களது அனுபவத்தையும் தகுதியையும் கருத்தில் கொண்டு உடனடியாக ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்திருந்தனர்.





