படுகாயமடைந்த முதலைக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஹேரத்கம வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து படுகாயமடைந்த முதலையை நிக்கவரெட்டிய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியரிடம் கடந்த சனிக்கிழமை (06) ஒப்படைத்துள்ளனர்.
படுகாயமடைந்த முதலையை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது குறித்த முதலை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை தாக்க முயன்றுள்ளது.
எவ்வாறிருப்பினும் படுகாயமடைந்த முதலை பாதுகாப்பாக கால்நடை வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


