2026ல் என் அம்மா பிரேமலதா பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார்- விஜய பிரபாகரன்

50 0

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று விஜயபிரபாகரன் கூறியிருந்தார்.இந்நிலையில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் ” 2006ல் எப்படி கேப்டன் ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் போனாரோ, அதேபோல் 2026-ல் என் அம்மா பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார். ” என்றார்.

இதற்கிடையே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்,\” 234 தொகுதிகளுக்கு நேரடியாக சென்று வருகிறோம். 2026 தேமுதிகவிற்கான காலம் நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் இருக்காது\” என்றார்