விழிப்புணர்வு ஊர்திப் பயணம் யேர்மன் வெளிவிவகார அமைச்சுடன் சந்திப்பு

464 0

தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று காலை தலைநகர் பேர்லினை அண்மித்து அங்கு மதியம் 12 மணிக்கு Brandenburger Tor முன்பாக கண்காட்சி பதாதைகளை பார்வைக்கு வைத்து ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் விநியோகித்து பல்லின மக்களுக்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டது.ஈழத்தமிழர்களின் இனவழிப்பு காட்சிப்படுத்தலை கண்டுகொண்ட பல்லின மக்கள் தமது கவலையையும் சமநேரத்தில் கரிசனையையும் தெரிவித்தார்கள். மாலை 3 மணிக்கு வெளிவிவகார அமைச்சுடன் நீண்டநேர முக்கிய உரையாடலும் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு முக்கிய அரசசார்பற்ற மனிதவுரிமை அமைப்புடனும் சந்திப்பு நடைபெற்றது.

இறுதியாக மாலை 6:30 மணிக்கு விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தை முன்னெடுத்தவர்களுக்கும் பேர்லின் வாழ் உறவுகளுக்குமான சந்திப்பு நடைபெற்று , புலம்பெயர் மக்களுக்கு இருக்கும் தார்மீக கடமைகளை மீள்நினைவுப்படுத்தி தமிழீழ விடுதலையை நோக்கி அயராது உழைப்போம் என உறுதியெடுக்கப்பட்டது.விழிப்புணர்வு ஊர்திப் பயணம் நாளைய தினம் Düsseldorf மாநகரில் நடைபெறவுள்ள தமிழின அழிப்பு நாள் பேரணியில் இணைந்துகொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.