ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க தீர்மானம்

42 0

ஆறாம் திகதி இடம்பெற இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒத்தி வைப்பதற்கு கட்சியின் முகாமைத்துவ குழு தீர்மானித்துள்ளது.

நேற்று கொழும்பில் கூடிய கட்சியின் முகாமைத்துவ குழு, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல தெரிவித்தார்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை இந்த மாதத்தில் பிரிதொரு தினத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ ஆலோசனை மற்றும் முகாமைத்துவ குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைய இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.