இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

39 0

மீட்டியாகொட மற்றும் பண்டாரகம பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை (01) மீட்டியாகொட பொலிஸ்  பிரிவின் மாலவென்ன வீதிப் பகுதியில் நபரொாருவரை  சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த உதவியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் லிந்துலையைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அத்தோடு, ஆகஸ்ட் 21 ஆம் திகதி, பண்டாரகம பொலிஸ் பிரிவில் உள்ள பொல்கொட பாலத்திற்கு அருகில் நபரொாருவரை  கொன்ற சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக உதவியாளரே  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹிரண, பாணந்துறை பகுதியைச்  சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.