இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க அரச நிறுவனங்களுக்குள் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவதையும், ஊழல் எதிர்ப்பு இலக்குகளை முன்னேற்றுவதில் அரசாங்கமும் சிவில் சமூகமும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் பிரான்சுவா வெலரியன் இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் உறுதிபூண்டுள்ளது என்றும் உறுதியளித்துள்ளார்.
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தலைவர் பிரான்சுவா வெலரியன் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் சனிக்கிழமை (30) பிற்பகல் நடைபெற்றது.
அரச மற்றும் தனியார் துறைகளில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரான்சுவா வெலரியனுக்கு விளக்கிய ஜனாதிபதியின் செயலாளர், ஊழல் எதிர்ப்பு இயந்திரத்தை வலுப்படுத்த அரசாங்கம் பல புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றும் அவை ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல்இஅரச நிதியை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்தல் மற்றும் நாட்டில் சிறந்த கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகிய பரந்த நோக்கங்களுடன் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.
இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க அரச நிறுவனங்களுக்குள் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவதையும், கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் பாராட்டிய டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் தலைவர், ஊழல் எதிர்ப்பு இலக்குகளை முன்னேற்றுவதில் அரசாங்கமும் சிவில் சமூகமும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் உறுதிபூண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

