ஜேர்மனி-பிரான்ஸ் இடையிலான அணுசக்தி தொடர்பான நீண்டகால சர்ச்சைக்கு முடிவு வந்துள்ளது.
ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் நீண்ட காலமாக அணுசக்தியைப் பற்றிய கருத்து வேறுபாடுகளில் இருந்தன.
இந்த முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர புதிய ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றை உருவாக்கியுள்ளன.
இந்த உடன்பாட்டின்படி, இரு தரப்பினரும் அணுசக்தி உட்பட குறைந்த கார்பன் உமிழ்வு எரிசக்தி வளங்களை சமமாக கருதவேண்டும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளன.
ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பிரான்சின் Toulon நகரத்தில் நடந்த 25-வது பிரான்ஸ்-ஜேர்மனி அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜேர்மனி அதன் அணுசக்தி நிலையங்களை மூடிவிட்ட நிலையில், பிரான்ஸ் அணுசக்தி திறன்களை விரிவுபடுத்தி வருகிறது.
இவ்வாறே வித்தியாசமான அணுகுமுறைகள் இருந்தாலும், இரு நாடுகளும் இனிமேல் ஒருவரின் எரிசக்தி கொள்கைகளை தடுக்கும் முயற்சிகளை தவிர்த்து பரஸ்பர ஆதரவு வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த புதிய பொருளாதார திட்டம், பாதுகாப்பு, தொழில்துறை மற்றும் டிஜிட்டல் கொள்கைகளை உள்ளடக்கியதாகும். இது கொள்கை முரண்பாடுகளை சமரசம் செய்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் கூட்டு முயற்சிகளுக்கான மாதிரியாக அமைய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது

