2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரச நிறுவனத் தலைவர்களுக்காக 2000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
‘அடிமட்ட அளவில் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்தஇ மாகாண அரச நிறுவனங்களின் தலைவர்கள் கிராமங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதிகாரிகள் அங்கு சென்று திரும்புவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். எங்களுக்கு சில வாகனங்கள் தேவை.
நாட்டில் உள்ள ஒவ்வொரு அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் 2இ000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை செயல்படாத உள்ளூராட்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மீண்டும் செயல்படுத்த பல புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.கிராமப்புறங்களின் வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

