எல்லயில் திடீர் தீ பரவல்

55 0

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலத்திற்கு அருகிலுள்ள மலையில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று திடீர் தீ பரவல் ஏற்பட்டதாக  பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலவும் வறண்ட வானிலையுடன் தீ வேகமாக பரவி வருவதாகவும், தீ பரவலுக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.