சிறுப்பிட்டியில் திருட வந்தவர்களால் ஆசிரியர் அடித்துகொலை

302 0

சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டி பகுதியில் 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற அத்தியார் இந்து கல்லூரியின் விவசாய பாட ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் ஓடு வழியாக உள்நுழைந்த திருடர்களினால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.