பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

40 0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு கோரி கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை தண்ணீர் போத்தலால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் நகரசபை உறுப்பினரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் நகரசபை உறுப்பினர் இன்று வியாழக்கிழமை (28) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு கோரி கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதி மன்றத்தின் முன்  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் தண்ணீர் போத்தலால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முன்னாள் நகரசபை உறுப்பினர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் நகரசபை உறுப்பினர் நாகொடை, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர்  என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் நகரசபை உறுப்பினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.