பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக முதலைகள் நிறைந்த ஆற்றில் குதித்த திருடன் மடக்கிப் பிடிப்பு!

42 0

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக முதலைகள் நிறைந்த ஆற்றில் குதித்த திருடன் ஒருவனை பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் களுத்துறை, மில்லனிய பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

திருடன் ஒருவன் புதன்கிழமை (27) இரவு களுத்துறை, மில்லனிய பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை திருட முயன்றுள்ளார்.

இதன்போது கடை உரிமையாளர் திருடனை மடக்கிப் பிடித்துள்ளார்.

பின்னர் திருடன் கடை உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

காயமடைந்த கடை உரிமையாளர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபரான திருடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட திருடனை மோட்டார் சைக்கிளில் மில்லனிய பொலிஸ் நிலையத்தைிற்கு அழைத்துச் செல்லும் போது திருடன் தனது கைவிலங்கினால் பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதனால் பொலிஸ் மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பின்னர் திருடன் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக முதலைகள் நிறைந்த ஆற்றில் குதித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து திருடனை மடக்கிப் பிடித்துள்ளனர்.