யாழ். பாலாவி விமான நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முழுமைப்படுத்தப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளன இருப்பினும் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது. விமான நிலையத்தின் இரண்டாம்கட்ட அபிவிருத்திக்கு தேவைப்படும் நிதிப்பெறுமதி எவ்வளவு என்பதையும், இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானிய வான்படையின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமான யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க வடக்கு – கிழக்கின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இவ்விமான நிலையம் ஊடாகவே எயார்சிலோன் நிறுவனத்தின் முதலாவது விமானப் பயணம் இரத்மலானையிலிருந்து சென்னைக்கு நடத்தப்பட்டது.
அதன்பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய தென்னிந்திய நகரங்களுக்கும் கொழும்புக்கும் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டு பின்னரான போர்க்காலச் சூழலில் பயணிகள் சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியில் முதற்கட்ட அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு தற்போது இவ்விமான நிலையம் மீளியக்கப்பட்டு வருகின்றபோதும், தற்போது பயன்பாட்டிலுள்ள விமான ஓடுபாதையை மேலும் ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு விரிவாக்கும் பட்சத்தில், ஏ-320 ரக விமானம் உள்ளிட்ட ஆகக்குறைந்தது 180 பயணிகளை ஏற்றக் கூடிய விமானங்கள் பலாலி விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து தரையிறங்கும் நிலையை உருவாக்கி, அதன்மூலம், புலம்பெயர்ந்தோரும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இந்த விமானநிலையம் ஊடாக வருகை த%

