யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

56 0

யாழ்ப்பாணம் ஆறு கால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் இன்று(17.08.2025) மாலை சம்பவித்துள்ளது.

யாழ்ப்பாணம் ஆறுகால் மட பகுதியில் காணப்படும் வாகன திருத்தும் இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது மேற்படி இளைஞனை மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே மின்சாரம் தாக்கி மரணம் அடைந்துள்ளார்.

மரணமடைந்துள்ள இளைஞனின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.