புலம்பெயர்ந்தோரின் மகளான பிரபல நடிகைக்கு சுவிட்சர்லாந்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது

56 0

சார்லீஸ் ஏஞ்சல்ஸ் முதலான புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஒருவருக்கு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பிரபல அமெரிக்க நடிகையும், திடைப்பட இயக்குநருமான லூசி லியூ (Lucy Liu), 30 ஆண்டுகளாக திரைத்துறையில் பணிபுரிந்தது மட்டுமில்லாமல், UNICEF தூதுவராகவும் செயலாற்றியுள்ளார்.

 

புலம்பெயர்ந்தோரின் மகளான பிரபல நடிகைக்கு சுவிட்சர்லாந்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது | Lucy Liu Given Career Achievement Award In Locarno

தைவான் நாட்டில் சீன பின்னணி கொண்டவரான லூசி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புலம்பெயர் பெற்றோருக்குப் பிறந்தவர்.

வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக்கொண்ட லூசி, இந்த விருது எப்படி மற்றவர்களை நேசிப்பது என்பதை தான் கற்றுக்கொண்டதைக் குறித்தது என்று கூறியதுடன், அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த தன் பெற்றோர் தன் மீது ஏற்படுத்திய தாக்கம் தன்னை இந்த அளவுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

சுவிட்சர்லாந்தின் Locarno மாகாணத்தில் நடைபெற்ற 78ஆவது Locarno திரைப்பட விழாவில் லூசிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.