100 நாள் ஆட்சி… ஜேர்மன் சேன்ஸலருக்குப் பின்னடைவு: ஆய்வு முடிவுகள்

61 0

ஜேர்மன் சேன்ஸலர் பதவியேற்று 100 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறைந்துள்ளது.

ஜேர்மன் சேன்ஸலருக்குப் பின்னடைவு

The Forsa Institute for Social Research and Statistical Analysis என்னும் அமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், சேன்சலர் பிரெட்ரிக் மெர்ஸைவிட வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது.

மற்றொரு ஆய்வில், வெறும் 29 சதவிகித மக்கள் மட்டுமே மெர்ஸ் நெருக்கடிகளை சமாளிக்கும் திறன் கொண்டவர் என கருதுவதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும், தனிப்பட்ட வகையில் மக்களிடையே மெர்ஸின் செல்வாக்கு 32 சதவிகிதமாக உள்ளது.

விடயம் என்னவென்றால், ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குப் பின், மெர்ஸுக்கு முந்தைய சேன்ஸலர்களான ஓலாஃப் ஷோல்ஸுக்கு 56 சதவிகிதமும், ஏஞ்சலா மெர்க்கலுக்கு 74 சதவிகிதமும் ஆதரவு இருந்தது.

100 நாள் ஆட்சி... ஜேர்மன் சேன்ஸலருக்குப் பின்னடைவு: ஆய்வு முடிவுகள் | Germany Merz Slips Behind Far In Poll In 100 Days

மெர்ஸைப் பொருத்தவரை, நீதிபதி ஒருவரின் நியமனம் தொடர்பில் எழுந்த ஒரு சர்ச்சை மற்றும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் விடயத்தில் அவர் எடுத்த முடிவு ஆகிய விடயங்கள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.