கிளிநொச்சியில் பெண்கள் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சிவசேன அமைப்பினுடைய சைவ புலவர் என்.பீ. ஸ்ரீந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று(14.08.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பாடசாலையில் அதிபர் நியமனத்திற்கு விண்ணப்பம் செய்யாத அதிபர் ஒருவரை நியமித்துள்ளமை ஒரு முறைகேடான விடயம்.
இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வு கிடைக்காத விடத்து தாங்கள் இதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

