2025 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி அம்பலாந்தோட்டை போலான மஸ்ஜிதுல் அரூசியா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
புத்தசாசன மத மற்றும் கலாசார நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகார திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் தேசிய மீளாதுன் நபி விழா இந்த வருடம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி அம்பலாந்தோட்டை போலான மஸ்ஜிதுல் அரூசியா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெறவுள்ள இவ்விழா தொடர்பான மீளாய்வு கூட்டம் தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தலைமையில் கடந்த தினம் அம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் கலப்பதி, மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ், முஸ்லிம் சமய விவகார திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், தேசிய மிலாத் விழா நடைபெற உள்ள அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட போலான கிராமத்தில் உள்ள மஸ்ஜிதுல் அரூசியா ஜும்ஆ பள்ளிவாசலின் வளாகத்தை பிரதியமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் அதிகாரிகள் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

