ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ எனப்படும் ‘பனா மந்திரி’ கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 5 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (13) காலை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயதுடைய ‘பனா மந்திரி’ எனப்படும் சாந்த முதுன்கொட்டுவ கொல்லப்பட்டார்.
இதன்போது, தலங்கம, பாலம்துன சந்திப் பகுதியில் துப்பாக்கிச் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் பயணித்த காருடன் அதன் சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.
இதன்போது, சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றினர்.

