மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று செவ்வாய்க்கிழமை (11) மாலை இடம் பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது போரதீவுப்பற் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 70 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டுக்கு தற்காலிக மின்சார இணைப்பை பெற முற்பட்டபோது மின்சாரம் தாக்கியவரை அயலவர்களின் உதவியுடன் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

