யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை சடலத்தின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட சடலமானது, மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் புங்குடுதீவு பகுதியில் உரிமையாளர் எவருமற்ற படகு ஒன்று கரையொதுங்கியிருந்த நிலையில், தற்போது இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

