புலம்பெயர்வோர் திருப்பி அனுப்பப்படுவது தொடரும்: ஜேர்மனி முடிவு

63 0

எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் நீட்டிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது. ஜேர்மனி அமுல்படுத்தியிருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாதத்தின் நடுவில் முடிவுக்கு வருகின்றன.

இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt) முடிவு செய்துள்ளார்.

எல்லை சோதனைகள் மற்றும் திருப்பி அனுப்பப்படுதல், செப்டம்பருக்குப் பின்பும் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

இதிலிருந்து, சர்ச்சைக்குரிய ஜேர்மனியின் எல்லைக்கட்டுப்பாடு, அதாவது, புகலிடக்கோரிக்கையாளர்கள் உட்பட ஆவணங்களற்ற புலம்பெயர்வோர், எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படுவது தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.