இஸ்ரேல் மத போதகர் ஒருவர் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மிரட்டல் விடுத்துள்ள விடயம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
இஸ்ரேல் மத போதகரான டேவிட் டேனியல் என்பவர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை மிரட்டும் வகையில் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸ் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதன் எதிரொலியாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இது குறித்து சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சரான புரூனோ (Bruno Retailleau), இஸ்ரேல் மத போதகரான டேவிட், பல மோசமான மிரட்டல்கள் விடுத்துள்ளதாகவும், குறிப்பாக, பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிராக அவர் மிரட்டல்கள் விடுத்துள்ளதாகவும், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அது தொடர்பில், தான் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 40ஆவது பிரிவின் கீழ் நீதித்துறைக்கு புகாரளித்துள்ளதாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சரான புரூனோ தெரிவித்துள்ளார்.

